கொரோனா தடுப்பூசியின் 02 டோஸ்களையும் பெற்ற சகல இலங்கையர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, தடுப்பூசி டிஜிட்டல் அட்டை (Digital Vaccine Card) வழங்கும் திட்டம் இன்று (11) சுகாதார அமைச்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரினால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முதலாவது அட்டை டோக்கியோவில் இடம்பெறும் ஒலிம்பிக் தொடரிற்கு செல்லவுள்ள
இலங்கை ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் செயலாளர் கபில ஜீவந்தவுக்கு வழங்கப்பட்டது.
இந்த டிஜிட்டல் அட்டையில், தடுப்பூசி பெற்ற நபரின் பெயர், வயது, அடையாள அட்டை இலக்கம், தடுப்பூசி வழங்கப்பட்ட திகதி, பெறப்பட்ட தடுப்பூசி வகை, தொகுதி எண் போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் அட்டையை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் விரைவில் பதிவேற்றப்படும்.
அதற்கு முன் தேவைப்படுபவர்கள் 011 7966366 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுகமானது இலத்திரனியல் தடுப்பூசி அட்டை! பெற்றுக்கொள்ளும் முறை இதோ!!
Reviewed by irumbuthirai
on
July 11, 2021
Rating:

No comments: