கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனுத் தாக்கல்:


கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார். 
உயர் நீதிமன்றம் 2011 இல் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய தேசிய பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு 35 மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்பட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி அரச பாடசாலைகளில் தரம் 01க்கு 
40 மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சின் அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரியே மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனு ஒன்று ஜோசப் ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
இந்த மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய பாடசாலை பணிப்பாளர்கள் என்பவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் கல்வி சேவை சட்ட திட்டங்கள் என்பவற்றை மீறி கல்வி அமைச்சின் அதிகாரிகள் இந்த விடயத்தில் செயற்பட்டுள்ளதாக அந்த மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனுத் தாக்கல்: கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனுத் தாக்கல்: Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.