வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை


வீட்டு வேலைகளுக்காக ஆட்களை எடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய முறையொன்றை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. 
இதற்கமைய தற்போது பணிபுரிந்து வருபவர்கள் மற்றும் எதிர்காலத்தில் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட இருப்போர் தமக்குரிய 
பிரதேச செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயம் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
யாரேனும் ஒருவர் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்படுவார்களாயின், அவர்கள் கிராம உத்தியோகத்தர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பான உத்தியோகத்தர் என்பவர்களின் கண்காணிப்பின் கீழ் வரும் வகையில் பிரதேச செயலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், சிறுவர்களை வேலைக்கமர்த்தும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். 
ஒழுங்கு முறையான வேலைத் திட்டமொன்று இல்லாததனாலேயே தற்போது அதிகளவிலான சிறுவர்கள் தொழிலில் அமர்த்தப்படுகின்றனர். எனவே இந்த விடயங்களை கருத்திற்கொண்டு அமைச்சு என்ற வகையில் முறையான வேலைத் திட்டமொன்றை அமுல்படுத்த தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுவோர் தொடர்பில் அறிவிக்கப்பட்ட புதிய முறை Reviewed by irumbuthirai on July 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.