எனது பார்வையில் இந்தக் Online கல்வி முறையானது ஆரம்ப பிரிவுகளுக்கு பொருத்தமான விடயமாக இல்லை. ஏனெனில் தரம் 1 மற்றும் 2 என்பவற்றை எடுத்துக்கொண்டால் பிள்ளைகள் எழுத்தையும் எண்ணையும் பழகும் பருவமாகும். அது வகுப்பறையில் நடைபெறும்
செயற்பாட்டு ரீதியான கற்றல் கற்பித்தல் முறையிலேயே சாத்தியம். ஆனால் இந்த Online முறையில் அது அவ்வளவு இலகுவானதல்ல என்று கல்வி சீர்திருத்தங்கள் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
எனவே இது போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு பிரயோக ரீதியான வேலைத்திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். அது Home Based Activity எனப்படும். ஒரு பாடத்திற்கு கிழமைக்கு ஒரு தடவை
மாணவர்கள் கணிப்பீடு/ஒப்படை செய்ய வேண்டும். அதை ஒவ்வொரு கிழமையும்பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். இதை உரிய ஆசிரியர்கள் அதிபர் ஊடாக வீட்டுக்கு பெற்றுக்கொள்ளவோ அல்லது பாடசாலைக்குச் சென்று பெற்றுக் கொள்ளவோ முடியும்.
அவர்கள் அதை திருத்தி பாடசாலை ஊடாக மீண்டும் பிள்ளைகளுக்கு கிடைக்க செய்வார்கள் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Join our WhatsApp groups:
Join our Telegram channel:
Like our FB page:
மாணவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை Home Based Activity செய்ய வேண்டும்: அறிமுகமாகும் புதிய திட்டம்!
Reviewed by irumbuthirai
on
July 02, 2021
Rating:
No comments: