Online இல் கற்க முடியாத மாணவர்கள்: இன்று முதல் ஆரம்பமாகும் Regional Learning Centres திட்டம்! (இலகுவான விளக்கங்களுடன் சுற்றுநிருபமும் இணைப்பு)


நிகழ்நிலை / தொலைக்கல்வி கல்வி நடவடிக்கைகளுக்காக வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை தாபித்தல் தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையிலிருந்து முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம். 

(1) சுற்றுநிருபம் வெளியான திகதி? 
17-06-2021. 

(2) இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது? 
05-07-2021 இலிருந்து...  (சுற்றறிக்கைக்கு மேலதிகமான தகவல்)

(3) யாருக்காக இந்த நிலையம்? 
இணையத்தள / நிகழ்நிலை செயற்பாடுகள் ஊடாக தொடர்பு கொள்ள முடியாத மாணவர்களுக்காக. 

(4) இத்திட்டத்தை கல்வி அமைச்சானது வேறு எந்த அமைச்சுகளுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது? 
1. கல்வி மறுசீரமைப்புகள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டு ராஜாங்க அமைச்சு. 
2. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சு. 
3. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு. 

(5) இந்த நிலையம் தொழிற்படுவது? 
வாரநாட்கள் ஐந்திலும் மு.ப. 7:30 - பி.ப. 3:30 வரை. 

(6) எந்த முறைமையை ஒட்டி கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும்? 
இ-தக்சலாவ (e-thakshalawa) உள்ளடக்க முறைமையை ஒட்டி. 

(7) நிலையத்தில் இருக்க வேண்டியது? 
1. குறைந்தது 10 கணனி/லேப்டாப்/டடெப். 
2. இணைய வசதி 

(8) இதனை நடைமுறைப்படுத்துவது வலய மட்ட குழுவின் மூலமாகும். அந்த குழுவின் அங்கத்தவர்கள்? 
1. வலய கல்விப் பணிப்பாளர் / மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி) -(குழுவின் தலைவர்) 
2. பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர். 
3. பிரதேச செயலாளர் /அவரின் பிரதிநிதி. 
4. அதிபர் ஒருவர். 
5. ஆசிரிய ஆலோசகர் ஒருவர். 
6. வலய வன்பொருள் மற்றும் வலையமைப்பு தீர்வு பணி குழுவின் உறுப்பினர். 

(9) இது தொடர்பான கண்காணிப்பு வழிகாட்டல் என்பன மாகாண மட்ட குழு மூலமாக இடம்பெறும். அதன் உறுப்பினர்கள்? 
1. மாகாணக் கல்விப் பணிப்பாளர் / மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி) - (குழுவின் தலைவர்) 
2. வலயக்கல்வி பணிமனைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக ஒரு வலயக் கல்விப் பணிப்பாளர். 
3. பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர். 
4. அதிபர் ஒருவர். 
5. ஆசிரிய ஆலோசகர் ஒருவர். 

(10) வலயமட்ட குழுவால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு? 
மாகாண மட்ட குழுவிலிருந்து பரிந்துரைகளை பெறல் வேண்டும். 

(11) மாகாண குழுவால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு? 
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை விவகாரங்கள்) மற்றும் மேலதிக செயலாளர் (கல்வி பண்புத்தர விருத்தி) ஆலோசனை பிரகாரம் செயற்பட வேண்டும். 

(12) e-thakshalawa உள்ளடக்க முறையை நடைமுறைப்படுத்தும் போது பிரச்சினைகள் வந்தால்..? 
கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் (தொலைக்கல்வி) உடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

(13) மத்திய நிலையத்திற்கு பொறுப்பாளர்
அதிபர். 

(14) பாடசாலை அல்லாத வேறு நிலையம் தேர்வு செய்யப்பட்டால் அதற்கு பொறுப்பாளர்? 
பொருத்தமான அதிபர் ஒருவரை வலயக்கல்வி பணிப்பாளர் நியமிக்க வேண்டும். 

(15) நிலையத்தை தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை? 
1. இணையதள வசதி அல்லது அதை பெறக் கூடிய பிரதேசம். 
2. தனிநபர் இடைவெளியை பேணக்கூடிய இயலுமை. 
3. குறைந்தது 10 மாணவர்களுக்கான தளபாட வசதி. 

(16) எந்த முன்னுரிமை அடிப்படையில் நிலையத்தை தெரிவு செய்ய வேண்டும்? 
1. செயல்பாட்டு நிலையில் உள்ள கணினிகள் மற்றும் இணையதள வசதி உள்ள பாடசாலை. 
2. டெப் கணனி வழங்கப்படும் திட்டத்திற்குரிய பாடசாலை. 
3. மாகாண கணணி மத்திய நிலையம் / வலய கணனி வள மத்திய நிலையம். 
4. கணினி வசதிகள் கொண்ட தொழில் பயிற்சி மத்திய நிலையம். 
5. நெனசல மத்திய நிலையம். 
6. சமய வழிபாட்டு ஸ்தாபனம் / பிரிவெனாக்களை ஒட்டி மத்திய நிலையத்தை அமைக்க வசதி கொண்ட இடம் 
7. சனசமூக நிலையம். 

(17) தெரிவுசெய்யப்படும் நிலையத்திற்கு கணணி வசதிகள் இல்லாவிட்டால்? 
வேறு பாடசாலையிலிருந்து தற்காலிக அடிப்படையில் பெற்றுக் கொடுக்க வலயக்கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

(18) நிலையத்தை நடத்தி செல்ல தேவையான குறைந்த அளவு பணிக்குழுவினர்? 
1. அதிபர் 
2. முற்பகலுக்கு ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியை. பிற்பகலுக்கு ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியை. (மொத்தம் 04 பேர்) 
3. பிரதேச செயலாளர் பணிமனை ஊடாக நியமிக்கப்படும் பட்டதாரி பயிலுனர் ஒருவர் (இவரை நியமிக்க வலயக்கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்) 

(19) நிலையத்திற்கான தூரம்? 
 மாணவர்கள் நடந்து செல்லக்கூடிய கிட்டிய தூரத்தில் இருத்தல் வேண்டும். 

(20) ஒரே தடவையில் அதிக மாணவர்கள் வருவதை தடுக்க? 
முறையான நேர அட்டவணையை தயாரித்து அதற்கமைய வரச் செய்ய வேண்டும். 


மேலும், 
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து இந்த நிலையத்தை நடாத்திச் செல்ல பொருத்தமானவாறு பெற்றோர்களின் அனுசரணையை பெறலாம். 


இது தொடர்பான சுற்றுநிருபத்தை சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.



Join our Telegram channel:

Like our FB page :
Online இல் கற்க முடியாத மாணவர்கள்: இன்று முதல் ஆரம்பமாகும் Regional Learning Centres திட்டம்! (இலகுவான விளக்கங்களுடன் சுற்றுநிருபமும் இணைப்பு) Online இல் கற்க முடியாத மாணவர்கள்: இன்று முதல் ஆரம்பமாகும் Regional Learning Centres திட்டம்! (இலகுவான விளக்கங்களுடன் சுற்றுநிருபமும் இணைப்பு) Reviewed by irumbuthirai on July 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.