Online கல்வி முறையில் மாணவர்களின் கல்விக்கான வாய்ப்பு சம அளவில் கிடைப்பதில்லை என தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யும் முறைப்பாடு நாடுபூராகவும் தொடர்கிறது.
இந்தக் கல்வி முறையில் கல்விக்கான சம உரிமை கிடைப்பதில்லை என்றும் சகல மாணவர்களுக்கும் சமமான கல்வி உரிமையை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும்
சுமார் இரண்டு வருடங்களாக நாட்டின் 60% மான மாணவர்களின் கல்வி இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த முறைப்பாடு செய்யப்படுகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுராதபுர மாவட்ட கிளையில்
இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முதன்முதலாக முறைப்பாடு செய்யப்பட்டது.
அதன்பின்னர் புத்தளம், பதுளை, கண்டி, மட்டக்களப்பு போன்ற மாவட்ட கிளைகளிலும் கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்திலும் இதுவரை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாத கல்வி அமைச்சர் G.L. பீரிஸ், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் குறித்த சங்கம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Online கல்விக்கு எதிராக நாடுபூராகவும் தொடரும் முறைப்பாடுகள்! அமைச்சரை பதவி விலகவும் கோரிக்கை!
Reviewed by irumbuthirai
on
July 04, 2021
Rating:
No comments: