திங்கள் முதல் Online கல்வி இடைநிறுத்தம்! ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம்! பாதெனிய கைது செய்யப்பட்டால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா?
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனவே இதனை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் சகலவிதமான இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்தும் விலக தீர்மானித்திருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு முறையான தீர்வு வழங்கும்
வரை திங்கட்கிழமை முதல் சகல விதமான இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்திருப்பதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் இந்த நியாயமற்ற நடவடிக்கைகளை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
வைத்தியர் சங்கத்தின் தலைவர் அனுருந்த பாதெனிய இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றது.
திங்கள் முதல் Online கல்வி இடைநிறுத்தம்! ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம்! பாதெனிய கைது செய்யப்பட்டால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா?
Reviewed by irumbuthirai
on
July 09, 2021
Rating:
No comments: