அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதாய்க் கூறி Twitter, Facebook,Google ஆகிய தளங்கள் மீது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழக்குத் தொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, Facebook நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க்
(Mark Zuckerberg), டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி
ஜேக் டோர்சே (Jack Dorsey) ஆகியோர் மீது இந்த வழக்குகள் மயாமியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன.
குறித்த நிறுவனங்கள் நியாயமற்ற வகையில் தங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறும் மற்ற பல பயனீட்டாளர்களுக்காகவும் தாம் குரல் கொடுக்கவிருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
Twitter, Google மற்றும் FB ற்கு எதிராக வழக்கு: ட்ரம்பின் அதிரடி!
Reviewed by irumbuthirai
on
July 10, 2021
Rating:
No comments: