இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உப குழு இம்மாதம் 9ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
குறித்த உபகுழு பல கட்டங்களாக தொழிற்சங்கங்களை சந்தித்து தமது பரிந்துரைகளை தயாரித்தது. இந்நிலையில் குறித்த பரிந்துரைகளுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த
சேவையை வரைவிட்ட சேவையாக அறிவிக்கப்படும். எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்திலிருந்து கட்டங்கட்டமாக சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். அதுவரை அடுத்த மாதத்திலிருந்து இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்கப்படும் என இந்த அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க,
நாம் எதிர்பார்த்தது சுபோதினி அறிக்கையை. ஆனால் 2018ஆம் ஆண்டு கூறிய பிரேரணைகளை இப்பொழுது கட்டங்கட்டமாக செய்ய இருக்கிறார்கள். சுபோதினி அறிக்கை என்ற விடயத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம். எவ்வாறாயினும் இந்த இடைக்கால தீர்வை நாம் எதிர்க்க போவதும் இல்லை. எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஏனைய தொழிற்சங்கங்களோடும் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
இந்த அமைச்சரவை தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அடுத்த மாதம் முதல் அதிபர், ஆசிரியர்களுக்கு 5000 ரூபா இடைக்கால கொடுப்பணவு!
Reviewed by irumbuthirai
on
August 31, 2021
Rating:
No comments: