கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்...


இந்தியாவின் சைடஸ் கேடில்லா நிறுவனம் தமது கொவிட் தடுப்பூசியான ஸைக்கோவ்-டி (ZyCoV-D) என்ற தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்கு அவசர அனுமதி கோரி கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்திருந்தது. 

இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக இந்திய மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

மேலும் இந்த தடுப்பூசி மூன்று முறை செலுத்தப்பட வேண்டும். 

இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட மையங்களில் தங்களின் இந்த தடுப்பூசியை 
விரிவாக பரிசோதனை செய்து விட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதேவேளை இந்த தடுப்பூசியே இந்திய மருந்து நிறுவனம் தயாரிக்கும் உலகின் முதல் மரபணு தடுப்பூசி என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. 

அதாவது ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல் தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (Hypodermic Needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படுவதே இதுவாகும்.
கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்... கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்... Reviewed by irumbuthirai on August 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.