காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். அவர்களை குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை ஒரு போதும் பயங்கரவாதிகளால்
தடுக்க முடியாது" என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.
தாலிபன்கள் திறந்துவிட்ட சிறைகளில் இருந்து வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அவர் தனது உரையில் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ISIS-K என்றழைக்கப்படும்
அமைப்பையும் ஜோ பைடன் குறிப்பிட்டதோடு மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை தொடர்ந்து செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ISIS அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான ஒரு பிரிவாக செயல்பட்டு வருவதே ISIS-K அமைப்பாகும்.
இந்த இரட்டை குண்டு வெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
கடந்த பெப்ரவரிக்கு பின்னர் அமெரிக்க
ராணுவத்திலனர் கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
எவ்வாறாயினும் தற்போதும் பொது மக்கள் பலரும் பல்வேறு சோதனை சாவடிகளை கடந்தும் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தமது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன.
விமான நிலையத்தில் கடந்த 06 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம்
Reviewed by irumbuthirai
on
August 27, 2021
Rating:
No comments: