நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சு விசேட அறிவித்தலை சுற்றுநிருபம் மூலம் வழங்கியுள்ளது.
அதாவது குறித்த அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மொத்த நோயாளர் கட்டில்களின் எண்ணிக்கையில் 50 வீதத்தை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர நோயாளர்கள், கர்ப்பிணிமார்கள் என்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மற்றும் சிசேரியன் போன்ற வழமையான கருமங்களில் தலையிடாமல்
கொவிட் நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் இடம் ஒதுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மேலும், கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடையும் நிலையிலுள்ள நோயாளர்களை, மேலதிக சிகிச்சைகளுக்காக இடைநிலை வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதன் மூலமும் பிரதான வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக புதிய நோயாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்!
Reviewed by irumbuthirai
on
August 14, 2021
Rating:
No comments: