ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு வேகமாக தலிபான்கள் தலைநகரை கைப்பற்றுவார்கள் என்று நினைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஆப்கானில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் விவகாரத்தில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு போர் ஐந்து ஜனாதிபதிகள்
வரை தொடரக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை மேம்படுத்துவது, தேசத்தைக் கட்டமைப்பது என்பதெல்லாம் தங்களது போரின் நோக்கமல்ல என்று கூறிய அவர், அமெரிக்க மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுப்பது மட்டும்தான் தங்களது நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தற்போது ஆப்கானில் எஞ்சியுள்ள அமெரிக்க படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பதிலடி கடுமையாக இருக்கும் - ஜோ பைடன்
Reviewed by irumbuthirai
on
August 17, 2021
Rating:
No comments: