தடுப்பூசிகள் தொடர்பில் பொதுவாகவே உலகளாவிய ரீதியில் பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த ஆய்வுகள் எல்லாமே ஒரு விடயத்தை உறுதிப்படுத்துகின்றன. அதாவது தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயற்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் நோய் தீவிரத்தன்மை ஏற்படுவது மற்றும் மரணம் ஏற்படுவது அதனால் குறைக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் தொடர்பான ஆய்வின் முடிவுகளை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியை நீலிகா மளவிகே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதாவது,
50 வயதிற்கு மேற்பட்டவர்களில் சைனோபாம் தடுப்பூசி பெற்றவர்களை விட 8 மடங்கு அதிகமாக எந்த தடுப்பூசியும் பெறாதவர்கள் மரணிக்கின்றனர்.
50 வயதிற்கு குறைந்தவர்களிலே சைனோபாம் தடுப்பூசி பெற்றவர்களை விட 3.8 மடங்கு அதிகமாக தடுப்பூசி பெறாதவர்கள் மரணிக்கின்றனர்.
மேலும் பைஸர், ஸ்புட்னிக் வீ மற்றும் அஸ்ராசெனகா தடுப்பூசிகளை பெற்ற 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை மரணம் நிகழவில்லை என பதிவிட்டுள்ளார்
தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பில் வெளியான ஆய்வு
Reviewed by irumbuthirai
on
August 26, 2021
Rating:

No comments: