அரச ஊழியர்களை வாரத்திற்கு 03 நாட்கள் சேவைக்கு அழைக்குமாறு பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சால் நேற்றைய தினம் (6) சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சும் நேற்றைய தினம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,
சகல மாகாண, வலய,கோட்ட கோட்ட கல்வி சார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கிழமைக்கு குறைந்தது மூன்று நாட்கள் பணிக்கு அழைக்க வேண்டும் என்றும் ,
பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்கள் பொருத்தமான முறையில் பகுதி பகுதியாக அழைக்கப்பட வேண்டும் என்றும்,
கல்விசார் ஊழியர்கள் பாடசாலைக்கு வரத் தேவையில்லை என்றும்,
ஆனால் அவசியம் கருதி அதிபர் கல்விசார் ஊழியர்கள் சிலரை அழைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வீட்டிலிருந்து Online முறை மூலமோ வேறு பொருத்தமான முறை மூலமோ மாணவர்களுக்கு கற்பிப்பதை எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் அதில் தெரிவித்துள்ளார்
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.
பாடசாலைக்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களை எவ்வாறு அழைப்பது? வெளியானது புதிய சுற்றறிக்கை!
Reviewed by irumbuthirai
on
August 07, 2021
Rating:
No comments: