கொவிட் நிலைமைக்கு முன்னதான நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதை இலங்கையில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரல்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா மரணங்கள் தொடர்பில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது இது கண்டறியப்பட்டதாக
தேசிய தொற்று நோய்கள் நிறுவனம் மற்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
நிமோனியா நோய் நிலைமைக்கு முன்னதாக ஏற்படும் இந்த நுரையீரல் சிக்கலானது எக்கியூட் லிம்போசிட்டிக் இன்ரஸ்ட்ரீசல் நிவ்மோ நைன்டீஸ் என அறியப்பட்டுள்ளது.
கொவிட் நிலைமையின் ஓர் ஆரம்ப அறிகுறியாக இதனை அறிந்து கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதல் முறையாக கொவிட் நிலைமைக்கு முன்னதான நுரையீரல் பாதிப்பு கண்டுபிடிப்பு!
Reviewed by irumbuthirai
on
August 23, 2021
Rating:
No comments: