பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி பெறலாமா ?


பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களும் தடுப்பூசியை பெறலாம். இதனால் தாய்க்கும் பிள்ளைக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என குடும்ப நல சுகாதார பிரிவின் விசேட வைத்தியர் சித்திரமாலி டீ சில்வா தெரிவித்துள்ளார். 

மேலும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் தாம் தடுப்பூசி பெற்றுக் கொண்ட உடனேயும் குழந்தைக்கு பாலூட்ட முடியும். அதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இது மாத்திரமன்றி 
தாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய குழந்தைகளுக்கு பாலூட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி பெறலாமா ? பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி பெறலாமா ? Reviewed by irumbuthirai on August 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.