போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் ஆப்கானில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாகவும் தலிபான்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் விமானநிலையத்தை மாத்திரம் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதனிடையே நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் விமான நிலையத்தில் கூடியதால் அங்கு சன நெரிசல் அதிகமாகி நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. எந்த நாட்டிற்காவது சென்று விட வேண்டும்
என்ற எண்ணத்துடன் பலர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானத்தில் பேருந்தில் ஏறுவது போல் முண்டியடித்துக்கொண்டு ஏறினர்.
சிறிது நேரத்தில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் விமான நிலையத்திலுள்ள நெருக்கடியான நிலையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே நடைபெற்ற துப்பாக்கி பிரயோகங்களின் போது இதுவரையில் சுமார் 5 பொதுமக்கள் இறந்ததாகவும் ஆனால் அவர்கள் யாருடைய துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள் என்பது சரியாக தெரியவரவில்லை எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததன் பிறகு இன்று முதலாவது நாள் காலை பொழுதில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே தலிபான்கள் பாரம்பரிய உடையுடன் கையில் ஆயுதங்களோடு நின்று கொண்டிருந்தனர்.
காபூல் நகரத்தில் சில கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு மாணவர்கள் செல்வதையும் பார்க்க முடிந்தது. மாணவிகளும் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெண்கள் கல்வி கற்க தடை விதிக்க மாட்டோம் என நேற்றைய தினம் தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காபூல் நகரில் சாதாரண பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் தற்போது தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய சொந்த பாதுகாப்புக்கு
இனி அந்த ஆயுதங்கள் தேவையில்லை. அவர்கள் இனி பாதுகாப்புடன் இருப்பர். நாங்கள் சாதாரண மக்களுக்கு தீங்கு விளைவிக்க இங்கு வரவில்லை என தலிபான்கள் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானுடன் நட்பையும் கூட்டுறவையும் ஆழப்படுத்த சீனா தயாராக இருப்பதாக சீன அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
தற்போதைய ஆப்கானை பாகிஸ்தான் அங்கீகரித்துள்ள நிலையில் தலிபான்களின் நடவடிக்கையை பொருத்தே தமது முடிவு அமையும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் கூற்றுப்படி தாலிபன்கள் கைப்பற்றிய எல்லை சந்திப்புகளில் 500 டன் உணவுப் பொருள்கள் காத்திருக்கின்றன. இந்த உதவிப் பொருகளின் விநியோகம் உடனடியாக மீண்டும் தொடங்கவேண்டும்" என்கிறார் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ்.
ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம். தொடர்ந்தும் அங்கு பணியாற்ற தயாராக இருக்கிறோம் என
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆப்கன் தூதுக்குழுவின் தலைவர் எலோய் ஃபில்லியன் தெரிவித்துள்ளார்.
போர் முடிந்துவிட்டது! தலிபான்கள் அறிவிப்பு! (முழுமையான அப்டேட்)
Reviewed by irumbuthirai
on
August 16, 2021
Rating:

No comments: