பட்டதாரிகளை மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆட்சேர்த்தல் (விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) / Recruitment of Graduates to Translation -2021
மொழிபெயர்ப்புத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் காணப்பட்ட போதும் உரிய தகைமைகளை உடையோர் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு மொழிபெயர்ப்பிற்கான தொழில்சார் தகைமையை (DOL Professional Qualification in Translation) ஏற்படுத்துவதற்காக, மொழிபெயர்ப்பு குறித்த ஒருவருட கால முழுநேர தொழில்சார் கற்கைநெறியொன்று அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் 03 மொழி வகைகளின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும்:
1. சிங்களம் - ஆங்கிலம் மொழி வகை
2. தமிழ் - ஆங்கிலம் மொழி வகை
3. சிங்களம் - தமிழ் மொழி வகை
ஆட்சேர்ப்புக்கான தகைமைகள்/ நிபந்தனைகள்:
1. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
2. சிறந்த நடத்தையுடனும், சிறந்த ஆரோக்கியத்துடனும் இருத்தல் வேண்டும்.
3.இலங்கையின் எந்தப் பகுதியிலும் பணியாற்றுவதற்கு இணங்குதல் வேண்டும்.
4. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்று 21 வயதுக்கு மேற்பட்டவராகவும் 35 வயதுக்கு குறைவானவராகவும் இருத்தல் வேண்டும்.
5. விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் இறுதித் திகதியில் கல்வித் தகைமைகள் மற்றும் ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
கல்வித் தகைமைகள்
(i). சிங்களம் - ஆங்கிலம் மொழி வகை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் மொழிபெயர்ப்பு கற்கையில் விசேட பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
(ii). தமிழ் - ஆங்கிலம் மொழி வகை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் மொழிபெயர்ப்பு கற்கையில் விசேட பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
(iii). சிங்களம் - தமிழ் மொழி வகை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றினால் பட்டத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.
மற்றும்
க.பொ.த (சா/த) அல்லது அதற்கு இணையான சிங்களம்/தமிழ் (தாய்மொழி) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
மற்றும்
க.பொ.த (சா/த) அல்லது அதற்கு இணையான சிங்களம்/தமிழ் (இரண்டாம் மொழி) பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
அல்லது
சிங்களம்/தமிழ் (இரண்டாம் மொழி) அல்லது மொழிபெயர்ப்பு (சிங்களம்/தமிழ் மொழி பிரிவின் கீழ்) டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
நேர்முகப் பரீட்சை:
நேர்முகப்பரீட்சைக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது. இப்பரீட்சை தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரிகளின் தகைமைகளை பரிசீலிப்பதற்கு மட்டுமே நடாத்தப்படும்.
பரீட்சை:
2021, செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி:
2021 - 08 - 20.
மேலதிக விபரங்களிற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பட்டதாரிகளை மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆட்சேர்த்தல் (விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு) / Recruitment of Graduates to Translation -2021
Reviewed by irumbuthirai
on
August 08, 2021
Rating:
No comments: