தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும்.
(11) ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உரித்துண்டா?
ஏதாவது ஒரு பதவியொன்றின் பொருட்டு உப அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று உரித்துண்டு எனில் மட்டும், அப்பதவியினை வகிப்பவர் ஒப்பந்த அடிப்படையின் பேரில் சேவையில் இருப்பினும் அதனை வழங்க முடியும்.
(12) கடமையின் பொருட்டு வெளிநாட்டிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத் துணைவரும் அரச உத்தியோகத்தர் எனில் அவன்/அவளிற்கு தாபன விதிக்கோவையின் XII வது அத்தியாயத்தின் 36வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்கும் போது ஒப்பந்தம் கைச்சாத்திடல் வேண்டுமா? கட்டாய சேவைக்காலம் அவசியமா?
ஒப்பந்தம் அல்லது கட்டாய சேவைக் காலத்திற்கு உட்படுத்தல் அவசியமற்றது.
(13) யாராவதொரு உத்தியோகத்தரின் பொருட்டு அரச சேவை சொத்துக் கடன் வழங்கக் கூடிய ஆகக் கூடிய தொகையை ( 30 இலட்சம் ரூபா அல்லது உத்தியோகத்தரின் 07 வருட கால சம்பளம் ஆகிய இரண்டில் குறைந்த தொகை) சிபாரிசு செய்யும் போது உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படக் கூடிய ஆகக் கூடிய மாதாந்த தவணைப்பணம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
உத்தியோகத்தர் பெறும் மாதாந்த தேறிய சம்பளத்தை (கொடுப்பனவுகள் தவிர்ந்த) மிஞ்சாதவாறு மாதாந்த தவணை அறவீட்டையும் வட்டியையும் கணக்கிடல் வேண்டும்.
(14) தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய பிணையாளிகளை முன்வைத்து, ஒரு தடவை இடர் கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் அக் கடன் பணத்தில் நிலுவை உள்ள போது மீள ஒரு தடவை இடர் கடன் தொகையின் பொருட்டு விண்ணப்பிக்கும் போது, மீண்டும் பிணையாளிகளை முன்வைக்க வேண்டுமா?
ஆம். இவ்விடயத்தில் முன்னைய பிணையாளிகள் விடுவிக்கப்படுவதுடன் கடைசியாகப் பெற்றுக் கொள்ளும் கடன் தொகையின் பொருட்டு பிணையாகும் நபர்கள் மொத்த இடர் கடன் தொகையின் பொருட்டும் பிணையாளிகளாவர்.
(15) இடமாற்ற கட்டளையில் சரிசெய்கைபடி கொடுப்பனவு செய்வதாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் அக் கொடுப்பனவினைச் செலுத்த முடியுமா?
ஒரு கலண்டர் மாதத்திற்கு குறைவான காலத்தினுள் அமுல்படுத்துவதற்கு இடமாற்றக் கட்டளையொன்றை வழங்கி, அதற்கமைய குறித்த இடமாற்றம் இடம் பெற்றிருப்பின் தாபன கோவையின் XIV வது அத்தியாயத்தின் 24வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சரிசெய்கை படியினைச் செலுத்த முடியும்.
தொடரும்...
ஏனைய பாகங்களுக்கு செல்ல...
No comments: