தாபன விதிக்கோவை மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பில் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகத்திற்கான தீர்வுகள் இங்கே வழங்கப்படுகின்றன. இவை தாபனப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட பதில்களாகும்.
இவ்வாறு அரச நிறுவன தலைவர்களால் அடிக்கடி வினவப்பட்ட விடயங்களுக்கான பதில்களை கட்டங்கட்டமாக இங்கே தருகிறோம்.
குறிப்பு: உரிய சுற்றறிக்கைகளும் முடியுமானவரை இணைக்கப்பட்டுள்ளன.
பாகம் - 04
(16) ஏதாவதொரு பதவிக்குரிய நியமனக் கடிதத்தில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக குறிப்பிடப்படாதுள்ள போது, உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவிக்குரிய வினைத்திறன் காண்தடைப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமா? சித்தியடைய வேண்டுமெனில் அதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
பதவிக்குரிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக் குறிப்பில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக உட்படுத்தப்பட்டிருப்பின், உத்தியோகத்தர் வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.
இருப்பினும் குறித்த நியமனக் கடிதத்தில் இவ் ஏற்பாடு குறிப்பிடப்படாதுள்ள போது, அதன் பொருட்டு பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
(17) வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடையும் பொருட்டு முறையான அதிகாரியினால் நிவாரண காலம் வழங்கப்பட்டிருப்பின், அக்காலத்தின் பொருட்டு சம்பள ஆண்டேற்றங்கள் வழங்க முடியுமா?
முடியும்.
(18) ஆட்சேர்ப்பு நடைமுறையில் ∕ சேவைகள் பிரமாணக் குறிப்பில் அல்லது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய வினைத்திறன் காண் தடைப்பரீட்சையில் சித்தியடைய முடியாத உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
இதன் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை இலக்கம் 02/2001 மற்றும் 02/2011(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் நிவாரணக் காலத்தினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள்களைச் சமர்ப்பிக்கலாம்.
(19) உத்தியோகத்தர்கள் பதவி உயர்வு கிடைக்கும் போது அப்பதவியின் வினைத்திறன் சம்பளத் தடைப் புள்ளியை மீறியிருப்பின் அதன் பின்னர் மேற்கொண்டு, சம்பள ஆண்டேற்றத்தை வழங்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது எவ்வாறு?
பதவி உயர்விற்கமைய சம்பளம் மாற்றியமைத்தலை மேற்கொண்டு வினைத்திறன் சம்பள புள்ளியை மீறியிருப்பின் 11.02.1994 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 11/94 மூலம் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக் கோவையின் VII வது அத்தியாயத்தின் 5:6 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
குறித்த சுற்றறிக்கைக்கு செல்ல..
(20) அரச சேவையில் நிரந்தர நியமனமொன்றை வகிக்கும் உத்தியோகத்தரொருவர் வேறொரு அரச பதவியொன்றிற்கு நியமனமொன்றை பெற்றுக் கொள்ளும் போது அவரது முன்னைய சேவைக் காலத்தை புதிய பதவியின் சேவைக் காலத்திற்கு சேர்த்துக் கொள்ள முடியுமா?
சேர்த்துக் கொள்ள முடியாது. அவ்வாறாயினும் அரச சேவையில் / மாகாண அரச சேவையில் உள்ள உத்தியோகத்தரொருவர் முறையான விதத்தில் விடுவிப்பினை மேற்கொண்டு, அரச சேவையிலேயே புதிய நியமனமொன்றைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில், அரச சேவை / மாகாண அரச சேவையின் கீழான முழுமையான சேவைக் காலத்தை ஓய்வூதியத்தினைக் கணக்கிடும் பொருட்டு மட்டும் சேர்த்துக் கொள்ள முடியும்.
தொடரும்..
ஏனைய பாகங்களுக்கு செல்ல..
அரச ஊழியர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் - பாகம் 04
Reviewed by Irumbu Thirai News
on
September 19, 2021
Rating:
No comments: