உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரில் இடம்பிடித்த தலிபான் தலைவர்

 

உலகின் செல்வாக்குமிக்க 100 பேரை டைம்ஸ் சஞ்சிகை பட்டியலிட்டுள்ளது. 
 
பல்வேறு பிரிவுகளின் கீழ் இது பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் தலைவர்கள் என்ற பிரிவிலே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜின் பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் ஆப்கானின் தற்போதைய 
 
துணை பிரதமரும் தலிபான் மூத்த தலைவருமான அப்துல் கனி பராதரும் இடம்பிடித்துள்ளார். 
 
ஒவ்வொரு தலைவர்களைப் பற்றிய குறிப்புகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. 
 
டோஹாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் சார்பில் பங்கேற்றவரும், படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டவரும் இந்த அப்துல் கனி பராதர்தான். 
 
"ஆப்கானிஸ்தானின் வருங்காலத்தின் அச்சு" என்றும் கடந்த ஆகஸ்டில் தாலிபன்களுக்குக் கிடைத்த வெற்றி, பராதர் நடத்திய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்பதாகவும் இவரைப் பற்றிய குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. 
 
தாலிபன்களுக்கு வெற்றி கிடைத்தது பேச்சுவார்த்தைகள் மூலமாகவா அல்லது சண்டைகள் மூலமாகவா என்பதில் அவருக்கும் தாலிபன்களின் 
 
அமைச்சரவையில் உள்ள வேறு சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஆனால் அதை அவர் மறுத்திருப்பதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரில் இடம்பிடித்த தலிபான் தலைவர் உலகில் செல்வாக்கு மிக்க 100 பேரில் இடம்பிடித்த தலிபான் தலைவர் Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.