2021 வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லாதவர்கள் எவ்வாறு பெயரைப் பதிய வேண்டும்? (வழிகாட்டல் இணைப்பு)
2021 வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர்கள் காணப்படுகின்றனவா என்பதை சரிபார்த்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
பெயரை சரிபார்ப்பது எப்படி? அவ்வாறு பெயர் இல்லாதவர்கள் எவ்வாறு பெயரை பதிவு செய்வது என்ற விடயங்களை இங்கே தருகிறோம்.
பெயரை சரிபார்த்தல்:
தமது பெயரை சரிபார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. (அங்கு உரிய மொழியை தெரிவு செய்து உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்கி தேடவும்)
பெயரை பதிவு செய்தல்:
பெயர் இல்லாதவர்கள் பெயரை பதிவு செய்வதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று அங்கே காணப்படுகின்ற விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செப்டம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
2021 வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லாதவர்கள் எவ்வாறு பெயரைப் பதிய வேண்டும்? (வழிகாட்டல் இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
September 02, 2021
Rating:
No comments: