தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்தல் - 2021

 

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்காக SLPS-1, SLEAS-1 மற்றும் SLEAS- 11/111 போன்ற தகுதியுடையவர்களிடமிருந்து கல்வி அமைச்சால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
43 தேசிய பாடசாலைகள் SLPS-1 தகுதி உடையவர்களை கொண்டும் 31 தேசிய பாடசாலைகள் SLEAS-1 தகுதி உடையவர்களை கொண்டும் 20 தேசிய பாடசாலைகள் SLEAS- 11/111 தகுதியுடையவர்களைக் கொண்டும் நிரப்பப்பட உள்ளன. 
 
இம்முறை வெற்றிடம் நிரப்பப்படும் போது உரிய அதிபர் பதவிக்காக நியமனம் பெறும் அலுவலர் அந்த பதவியில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் சேவையாற்ற வேண்டும். 
 
நேர்முகப் பரீட்சையில் புள்ளி வழங்கப்படும் முறை (ஒவ்வொரு விடயத்திற்குமான உச்ச புள்ளிகள் தரப்பட்டுள்ளன) 
 
சேவை அனுபவம் -30 
 
கல்வித்தகுதி -15 
 
ஆங்கில மொழித் தேர்ச்சி - 05 
 
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவு - 05 
 
சேவை மதிப்பீடு - 05 

கல்வி தொடர்பான ஆய்வு மற்றும் வெளியீடு - 05 
 
முன்வைப்பு - 20 
 
விடய ஆய்வு -10 
 
நேர்முகப் பரீட்சையின் போது காட்டிய ஒட்டுமொத்த திறமை மற்றும் ஆளுமை - 05 
 
 
 
விண்ணப்ப முடிவு திகதி: 12-10-2021. 
 
 
ஒவ்வொரு விடயங்களுக்குமான முழுமையான விபரங்களை கீழே காணலாம்.

 
Notice:
 
Vacancy School List:

Marking Scheme:

 
Application:
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்தல் - 2021 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை தெரிவு செய்தல் - 2021 Reviewed by Irumbu Thirai News on September 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.