21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்!

 

Online இல் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் அதிபர் ஒருவரும் மினுவாங்கொடை வலயத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவரும் அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 
 
குறித்த விசாரணை முடிவில் ஆசிரியை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, 

முறையான எழுத்துமூல அழைப்பு இன்றி தொலைபேசி மூலமே விசாரணைக்கு அழைத்தனர். இந்த இடத்தைப் பற்றிய மதிப்பு மரியாதை என்னிடம் இருந்தது. ஆனால் இந்த விடயங்களுக்கெல்லாம் இங்கே அழைத்திருக்கிறார்கள். இந்த இடத்திற்கு அழைக்கும் அளவிற்கு இது குற்றமா என்ற பிரச்சினை எனக்கு இருக்கிறது. 
 
இந்தக் குற்றச்சாட்டை நான் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் யாரையும் அச்சுறுத்துபவள் அல்ல. நான் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் அவ்வாறு யாரையும் அச்சுறுத்தியிருந்தால், தொலைபேசியில் கதைத்த நேர அளவை கூறுங்கள் என்று கேட்டேன். அவர்கள் சொல்லவில்லை. 
 
மூன்றாவது முறையும் கேட்டவுடன்தான் சொன்னார்கள் 21 செக்கன்கள் கதைத்திருப்பதாக. நான் உடனே கேட்டேன் 

ஒருவரை அச்சுறுத்துவது என்றால் 21 செக்கன்கள் போதுமா என்று. நான் கடைசிவரை குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவர் கூறினார். 
 
மேலும் அங்கிருந்த அதிகாரிகள் எம்முடன் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். எவ்வாறாயினும் நான் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாட்டுடன் செயற்படக்கூடிய ஒரு உறுப்பினர். நாங்கள் மேலதிக சம்பளத்தை கேட்கவில்லை. இல்லாமல் போனதை தான் கேட்கிறோம். எதிர்காலத்திலும் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு செய்யக்கூடிய ஒரு தொழிற் சங்க உறுப்பினராக நான் இருப்பேன் என்று தெரிவித்தார்.
21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்! 21 செக்கன்களில் ஒருவரை அச்சுறுத்தலாமா? CID க்கு அழைக்கப்பட்ட ஆசிரியையின் விளக்கம்! Reviewed by Irumbu Thirai News on September 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.