செயன்முறை பரீட்சை பெறுபேறு இல்லாமல் 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி:

 

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(23) இரவு வெளியாகின. கொவிட்-19 பரவல் காரணமாக, இப்பரீட்சை இந்த வருடம் மார்ச் மாதம்தான் நடைபெற்றது. 
 
கொவிட்-19 காரணமாக, அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெற்றிருக்கவில்லை. அதற்மைய, குறித்த செயன்முறைப் பரீட்சை பெறுபேறுகள் இன்றி 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர், செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செயன்முறை பரீட்சை பெறுபேறு இல்லாமல் 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி: செயன்முறை பரீட்சை பெறுபேறு இல்லாமல் 236,053 பேர் உயர் தரத்துக்கு தகுதி: Reviewed by Irumbu Thirai News on September 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.