அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கான தீர்வுகளை அமைச்சரவை முன்வைத்த பொழுது அதில் ஒரு விடயமாக செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களுக்கு 5000 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கொடுப்பனவு ஏன் வழங்கப்படுகிறது என்ற காரணத்தை கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதாவது இணையவழி கற்பித்தலுக்கான
செலவுகளை ஈடு செய்யவே இந்த கொடுப்பனவு வழங்குவதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுத்தது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஒன்றரை வருடங்களாக அவர்களுக்குரிய சம்பளம் முறையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இணையவழி கற்பித்தலுக்காக ஏற்படுகின்ற மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டே இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்
5,000/- கொடுப்பணவு வழங்குவதற்கான காரணத்தை வெளியிட்ட கல்வி அமைச்சர்:
Reviewed by irumbuthirai
on
September 04, 2021
Rating:
No comments: