அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர்- 11 தாக்குதல் (9/11 தாக்குதல்) குறித்து செளதி அரேபிய அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் எனவும், அவர்கள் தாக்குதலைத் தடுக்க முயலவில்லை எனவும், இந்த தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட வேண்டும் எனவும் 9/11 தாக்குதலில் இறந்தவர்களின் பலரது உறவினர்களும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஏனெனில் 9/11 தாக்குதல் நடத்திய 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் நீண்டகால கோரிக்கைக்குப் பிறகு இந்த ரகசிய ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது,
ஆனால், 9/11 தாக்குதலுக்கும் செளதி அரசுக்கும் தொடர்பு இருப்பதாக இந்த ஆவணங்களில் எந்தவித ஆதாரங்களும் இல்லை.
16 பக்கங்களைக் கொண்ட எஃப்.பி.ஐயின் (Federal Bureau of Investigation - FBI) இந்த ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டாலும், பல இடங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் ஒரு ரகசிய நபரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலைப் பற்றியது. அவரின் விபரங்கள் இப்போதும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.
முன்னைய ஜனாதிபதிகள் பாதுகாப்பு பிரச்சினைக்காக இதை வெளியிடாமல்
இருந்தாலும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் துணிந்து இதை வெளியிட்டுள்ளார்.
தாக்குதலில் பங்கெடுத்த இருவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருக்கும் ராஜா ஃபஹத் மசூதியைச் சேர்ந்த இமாம் ஃபஹத் அல் துமைரேவுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த இமாம் தாக்குதல் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டார்.
எவ்வாறாயினும் குறித்த அறிக்கையை வரவேற்றுள்ள சவுதி அரேபியா 2001-09-11 இல் நடந்த அந்த கொடூர தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மீண்டும் ஒரு முறை அழுத்தமாக மறுத்திருக்கிறது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பற்றி சவுதிக்கு ஏற்கனவே தெரியுமா? வெளியான இரகசிய அறிக்கை!
Reviewed by Irumbu Thirai News
on
September 13, 2021
Rating:
No comments: