கொரோனாவுக்கு மருந்தாக சிவப்பு எறும்பு சட்னி: நீதிமன்றம் சென்ற வழக்கு: நடந்தது என்ன?

 

இந்தியாவின் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பை சட்னியாக பயன்படுத்தி வருகின்றனர். 
 
இந்த சிவப்பு எறும்புகளுடன் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து அதை தேங்காய் சட்னி போல பயன்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது, 
 
இந்த சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் போன்றன அதிகமாக காணப்படுகின்றன. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கொரோனாவுக்கு மருந்தாக இந்த சட்னியை உச்சநீதிமன்றம் பரிந்துரைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 
 
இது தொடர்பில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இந்த சிவப்பு எறும்பு சட்னியை நீங்கள் உங்களது சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம். ஆனால் நாட்டில் உள்ள அனைவருக்கும் இதை கொடுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிட முடியாது. பாரம்பரிய மருந்துகள் நிறைய காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. 
 
இது மாத்திரமன்றி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குறித்து மனுதாரர் கொரோனாவுக்கு தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கொரோனாவுக்கு மருந்தாக சிவப்பு எறும்பு சட்னி: நீதிமன்றம் சென்ற வழக்கு: நடந்தது என்ன? கொரோனாவுக்கு மருந்தாக சிவப்பு எறும்பு சட்னி: நீதிமன்றம் சென்ற வழக்கு: நடந்தது என்ன? Reviewed by Irumbu Thirai News on September 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.