மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்)

 

தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு காணப்படுகின்ற தொலைக்கல்வி வசதி வாய்ப்புகளும் அது தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறைகளையும் இங்கே தருகிறோம். 
 
(01) "ஈ-தக்சலாவ (e- thaksalawa)" கற்றல் முகாமைத்துவ முறைமை: 
 
இணையவழி ஊடாக செயற்படுத்தக்கூடிய தேசிய தொலைக் கல்வி செயற்திட்ட முறையாக இது காணப்படுகிறது. 
 
இதில் தரம் 1 - 13 வரை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் பாட உள்ளடக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
 
இது மாத்திரமன்றி பாடநூல்கள், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, கடந்தகால வினாப்பத்திரங்கள், நிகழ்நிலை(Online) வினாக்கள், மீட்டல் பயிற்சிகள், மாதிரி வினாத்தாள்கள், செயலட்டைகள் போன்றனவும் முடியுமானவரை இணைக்கப்பட்டுள்ளன. 
 
இதுவரை சுமார் ஒரு லட்சம் பாடப்பொருள் உள்ளடக்கங்கள் மற்றும் 65,000 பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக ஈ-நூலகம், அழகியல் அம்சங்கள், கல்விசார் விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கிய இந்த முறைமை அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் (Update)  முறைமையாகவும் காணப்படுகிறது. 
 
மேலதிகமாக ஆரோக்கியம் மற்றும் போசாக்கு தொடர்பாக மாணவர்களை அறிவுறுத்தும் இணையவழி பாடத்திட்டம் ஒன்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான இணைய வழி பாடத்திட்டம் ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளன 
 
குறித்த இணையதளத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
 
 
(02) குருகெதர (Guru Gedara) கல்வி தொலைக்காட்சி அலைவரிசை: 
 
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் "ஐ(Eye)" மற்றும் "நேத்ரா (Nethra)" அலைவரிசைகளின் ஊடாக நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள். சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமாக ஒரு மொழி மூலத்தில் 36 பாடங்கள் என்ற ரீதியில் ஒளிபரப்பப்படுகின்றன. 
 
பொதுவாக திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சிங்கள மொழிமூல பாடங்களும் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழ் மொழிமூல பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. (கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு மேலதிகமாக ஒளிபரப்பப்படும் பாடங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக இதனுடன் தொடர்ச்சியாக இணைந்திருப்பது முக்கியமாகும்.) 
 
அந்த வகையில், 
 
(1) ஆரம்ப பிரிவின் 3 - 5 வரையான தரங்களுக்காக தாய்மொழி, கணிதம் மற்றும் சுற்றாடல் போன்ற பாடங்களும், 
 
(11) 6 - 11 வரையான தரங்களுக்காக கணிதம், விஞ்ஞானம், தாய்மொழி (சிங்களம் / தமிழ்), வரலாறு, ஆங்கிலம், சமயம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், குடியுரிமைக்கல்வி, புவியியல், கலை மற்றும் நாடகக் கலை, அழகியல், நடனம் போன்ற பாடங்களும், 
 
(111) 12 - 13 வரையான தரங்களுக்கு ஒருங்கிணைந்த கணிதம், உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல், விவசாயம், பொருளாதாரம், கணக்கியல், வணிகக் கற்கைகள், புவியியல், சிங்களம்,  தமிழ், அரசியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல், பொறியியல் தொழில்நுட்பவியல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நாடகமும் அரங்கியலும், சித்திரம் தர்க்கம் மற்றும் நடனம் போன்ற பாடங்களையும் சென்று பார்வையிடலாம். 
 
குருகெதர நேர அட்டவணையை பின்வரும் லிங்குகளில் சென்று பார்வையிடலாம்.
 
 
ரூபவாஹினி குருகெதர நிகழ்ச்சிகளை ரூபவாஹினி ஒளிபரப்புக்கு பின்னர் பின்வரும் ஊடகங்கள் மூலமாகவும் பார்வையிடலாம்: 
 
(1) தேசிய கல்வி நிறுவனத்தின் Channel NIE YouTube அலைவரிசை: 
 
(11) ஈ - தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமை. 
 
(111) நெனச கல்வி செயற்திட்டம் மூலமாக 2 டயலொக் அலைவரிசைகளாக (Dialog Satellite Channel) செயல்படும் நெனச சிங்கள மற்றும் நெனச தமிழ் போன்ற இரண்டு கல்வி அலைவரிசைகள். 
 
 
(03) இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உள்ளூர் வானொலி சேவையினால் ஒலிபரப்பப்படும் கல்விசார் நிகழ்ச்சிகள்: 
 
கீழே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் வானொலி சேவை நான்குடனும் இணைந்து அந்தந்த மாகாண கல்வித் திணைக்களங்களினால்  கல்விசார் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. 
 
இதன்கீழ் ஒலிபரப்பப்படும் சகல பாடங்களின் ஒலிநாடாக்கள் ஈ - தக்சலாவ வலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக இந்த நான்கு சேவைகளின் ஊடாக ஒலிபரப்பப்படும் வானொலி பாடங்களை Radio e-thaksalawa எனும் கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஊடாகவும் செவிமடுக்கலாம். 
பிராந்திய வானொலிச் சேவைகளையும் அதன் அலைவரிசைகளையும் கீழே காணலாம்:

 

 
 
(04) மாகாண கல்வித் திணைக்களத்தினால் மற்றும் வலய மட்டத்தில் தயாரிக்கப்பட்ட கற்றல் உள்ளடக்கம்: 
 
இதற்கு மேலதிகமாக மாகாண கல்வித் திணைக்களத்தினால் மற்றும் வலய மட்டத்தில் கற்றல் உள்ளடக்கங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் இணைப்புகள் சில கீழே தரப்பட்டுள்ளன. 
சப்ரகமுவ: https://enenapiyasa.lk/index-tm.html
வடமேல்:  http://nwpedu.lk/ 
வடமத்திய: https://www.edncp.lk/ht/index.php 
வடக்கு: http://www.edudept.np.gov.lk/
மேல்:  http://www.wpedu.sch.lk/
மத்திய: http://www.centralpedu.sch.lk/
 
 
மேற்படி அனைத்து வலைத்தளங்களிலும் பண்புத் தரத்துடன் கூடிய மிகப் பெரிதான உள்ளடக்கங்கள் காணப்படுவதால் அவற்றையும் கற்றலுக்காக மாணவர்கள் பயன்படுத்தலாம்.
----xx----

மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்) மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்) Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.