குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்:

 

குதிரைகளின் உடலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் என்கிற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க மருத்துவர் ஜேசன் மெக்எலியா வலியுறுத்தியுள்ளார். 
 
இந்த மருந்து இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. ஐவர்மெக்டின் மருந்தை குறைந்த அளவில் மனிதர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது 
 
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைத்தால் மட்டுமே இம்மருந்து கிடைக்கும், காரணம் இது ஆபத்தான மருந்து. 
 
ஐவர்மெக்டினை அளவுக்கு அதிகமாக தவறாக எடுத்துக் கொள்வதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பை விட, மோசமாக அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேசன் மெக்எலியா கூறியுள்ளார். 
 
இந்த மருந்து இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்கும், கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கவும் உதவும் என இம்மருந்து விளம்பரப்படுத்தப்பட்ட போது பெரிதும் சர்ச்சையானது. அமெரிக்காவின் எஃப்.டி.ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கடந்த மாதம், ஐவர்மெக்டினைப் பயன்படுத்த வேண்டாம் என ஒரு நீண்ட அறிக்கையையே வெளியிட்டது. 
மூலம்: பிபிசி
குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்: குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்: Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.