பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் முறை இதோ! (வழிகாட்டல் அறிக்கை இணைப்பு)

 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை கல்வி அமைச்சின் செயலாளரிடம் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 
அதில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு: 

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் நான்கு கட்டங்களாக இடம்பெறும். 
 
1ம் கட்டம்: 
மொத்த மாணவர் எண்ணிக்கை 200 க்கு குறைவாக உள்ள பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு (தரம்:1-5) ஆரம்பித்தல். 
 
2ம் கட்டம்: 
மொத்த மாணவர் எண்ணிக்கை 200 க்கும் அதிகமான பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவை ஆரம்பித்தல். மேலும் மொத்த மாணவர் எண்ணிக்கை 100க்கும் குறைவான பாடசாலைகளின் சகல தரங்களையும் ஆரம்பித்தல். 
 
3ம் கட்டம்: 
சகல பாடசாலைகளிலும் தரம் 10 தொடக்கம் 13 வரையான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும். மேலும் மொத்த மாணவர் எண்ணிக்கை 200 க்கு குறைவான பாடசாலைகளின் சகல தரங்களும் ஆரம்பிக்கப்படும். 
 
4ம் கட்டம்: 
சகல பாடசாலைகளிலும் சகல தரங்களும் ஆரம்பிக்கப்படும். 
 
 
ஒவ்வொரு கட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் கொரோனா நோயின் பரவல் நிலை கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பாடசாலை வளாகத்திற்குள் கொவிட் பரவலை தடுப்பது தொடர்பாக 2020-04-29 ம் திகதி வெளியிடப்பட்ட FHB/SHU/Let/2020 என்ற இலக்கம் கொண்ட சுகாதார வழிகாட்டல் முறைகளை பின்பற்ற வேண்டும். 
 
மாகாண, வலய, கோட்ட பாடசாலை சுகாதார குழுக்களை அழைத்து அந்தந்த பாடசாலைகளில் முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
 
சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் கல்வி அமைச்சால் சகல பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 

2021/01/04 திகதி ED/01/21/07/03/2020-111 இலக்கம் கொண்ட "சுகாதார அடிப்படையில் பாடசாலைகளை திறத்தல்" என்ற வழிகாட்டலை பின்பற்ற வேண்டும். 
 
பாடசாலைக்குள் எந்நேரமும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 
 
சிற்றுண்டிச்சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். 
 
ஒரு வகுப்பு இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இடைவேளை இரு தடவை வழங்கப்படுவது சிறந்தது. 
 
சாப்பிடுவதற்காக முக கவசத்தை அகற்றும்போது இடைவெளி பேணப்படுவதில் கண்டிப்பாக இருக்க வேண்டும். 
 
மாணவர்களோடு சம்பந்தப்படும் ஆசிரியர்கள் உட்பட சகல தரப்பினரும் தடுப்பூசி போட்டிருத்தல் வேண்டும். 

தடுப்பூசி செலுத்தாதவர்கள் அது தொடர்பில் சிரமங்கள் இருந்தால் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார தரப்பினருக்கு அறியப்படுத்த வேண்டும். 
 
கொவிட் அறிகுறிகளோடு மாணவர் இனங்காணப்பட்டால் உடனே மேலதிக வழிகாட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக பிரதேசத்திற்கு பொறுப்பான வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும். (இதற்காக ஒவ்வொரு பிரதேசத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்) 
 
பிள்ளைக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் என கருதினால் முதலில் வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு பின்னர் உரிய தரப்பினருக்கு அறிவிக்கவேண்டும். 
 
இது தொடர்பான முழுமையான வழிகாட்டலை கீழே காணலாம். 
 



பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் முறை இதோ! (வழிகாட்டல் அறிக்கை இணைப்பு) பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் முறை இதோ!  (வழிகாட்டல் அறிக்கை இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on September 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.