தவறான விளம்பரங்களையும் பதிவுகளையும் வெளியிட்டதாக 5 சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளதாக சவுதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனமான SPA கூறியுள்ளது.
இந்த வருடம் மட்டும் இதுவரை சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை மீறியதாக
65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு
தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் விதிமுறைகளை யாராவது மீறினால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் சவுதியில் இருக்கின்றன.
சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா!
Reviewed by Irumbu Thirai News
on
September 28, 2021
Rating:
No comments: