ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு தொடர்பான தகவல்களை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அது தொடர்பான தகவல்களை இங்கு தருகிறோம்.
நாட்டின் உத்தியோகபூர்வ பெயர்: ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்.
பிரதமர்:
முல்லா மொஹம்மத் ஹஸன் அகுந்த் (இவர் தாலிபன் இயக்கத்தின் ஸ்தாபகர் முல்லா ஒமருடன் நண்பராக இருந்தவர்)
துணை பிரதமர்கள்:
1) முல்லா அப்துல் கனீ பரதர்.
2) மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி.
உள்துறை:
சிராஜுதீன் ஹக்கானி (ஹக்கானி ஆயுத போராளிகள் குழுவின் தலைவருடைய மகன்)
பாதுகாப்பு:
முல்லா மொஹம்மத் யாகூப் முஜாஹித் (இவர் தாலிபன் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்)
நிதி:
முல்லா ஹிதாயத் பத்ரி
வெளியுறவு:
மெளலவி ஆமிர் கான் முடாக்கி
நீதித்துறை:
அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி
தகவல் துறை:
கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா
தற்போது அறிவிக்கப்பட்டவர்கள், முறைப்படி அரசு அமையும்வரை இடைக் காலமாக அமைச்சரவையை வழி நடத்துவார்கள் என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் சஃபியுல்லா முஜாஹிதின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அரசில் பெண்களுக்கு இடம் இல்லாததனால் தலைநகர் காபூல் மற்றும் வட கிழக்கு மாகாணமான படக்ஷனில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண் அமைச்சர் இல்லாத அரசாங்கத்தை ஏற்றுகொள்ளப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானில் அறிவிக்கப்பட்டது புதிய அரசு: நாட்டின் பெயரும் மாற்றம்!
Reviewed by Irumbu Thirai News
on
September 09, 2021
Rating:
No comments: