சைனோபார்ம் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணம் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவு என்பன ஏனைய தடுப்பூசி போட்டவர்களை விட அதிகம் என இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோர்க்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் மூன்றாவதாக தடுப்பூசியாக வேறு ஒரு தடுப்பூசியை வழங்குமாறு அந்த சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்த மூன்றாவது தடுப்பூசியாக அஸ்ராசெனகா, மொடர்னா அல்லது
பைசர் போன்ற தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் எனவும் அது பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸை வழங்கியவர்களுக்கு இரண்டாவது டோஸை வழங்க முடியாத நிலை இருந்தால் அதற்காக அஸ்ராசெனகா, மொடர்னா அல்லது பைசர் போன்ற தடுப்பூசிகளை வழங்குமாறும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
Sinopharm தடுப்பூசி போட்டவர்களின் நிலை: கோரிக்கை நிறைவேறுமா?
Reviewed by Irumbu Thirai News
on
September 09, 2021
Rating:
No comments: