அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்றையதினம் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமது முடிவை தொழிற்சங்கங்களுடன் பேசி நாளைய தினம்(இன்று) அறிவிப்பதாக கூறியிருந்தார்கள். அந்த வகையில் இந்த தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் சுபோதினி அறிக்கையின்படி தீர்வை கோரினோம். ஆனால் அமைச்சரவை உபகுழு வேறு ஒரு தீர்வை தந்தது. அபபடியானால் சுபோதினியின் முதற்கட்டமாக இதை கருத்திற்கொண்டு அதை ஒரே தடவையில் தருமாறு கோரியிருந்தோம்.
ஆனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் அவ்வாறான தீர்வு கிடைக்கவில்லை.
நேற்று பிரதமருடனான பேச்சுவார்த்தையில் நடந்த விடயங்களை முழுமையாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்க.
எனவே இன்று எமது தொழிற்சங்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுத்துள்ளோம்.
அதாவது எமது தொழிற்சங்க போராட்டத்தை அவ்வாறே தொடர தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கும் பொழுது பாடசாலைக்குச் செல்வதா இல்லையா என்ற முடிவை இன்னும் ஒருசில தினங்களில் அறிவிப்போம்.
நேற்றைய தினம் பேச்சுவார்த்தையின் போதும் ஒருசிலர் எமது கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணிக்கும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு பின்னால் யார் செயற்படுகிறார்கள் என எமக்கு புரியவில்லை.
நேற்றைய கூட்டத்தின் போதும் நாம் தெளிவாக சொன்னோம்... அரசாங்கம் தரும் தீர்வை பெற்றுக் கொண்டு செல்வதற்காக நாம் இங்கு வரவில்லை என்று.
ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க 30 பில்லியன் செலவாகும் என்கிறார்கள். இதை விட அதிகமான பணம் அனாவசியமாக செலவழிக்கிறார்கள். கல்விக்காய் செலவழிக்கத் தான் கஷ்டமாக இருக்கிறது.
எவ்வாறாயினும் எமது போராட்டத்தை வெற்றியோடுதான் நிறைவு செய்வோம் என்று இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துக்களை தெரிவித்தனர்.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முடிவு வெளியானது!
Reviewed by Irumbu Thirai News
on
October 13, 2021
Rating:
No comments: