ஆசிரியர்களையும் பயங்கரவாதிகளையும் ஒப்பிட்டு விளக்கிய சரத் வீரசேகர! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை!
இன்று(14) மகரகமவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு சம்பளம் போதாவிட்டால் கட்டாயம் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் இப்படி ஒன்றும் இருக்கிறது...
பயங்கரவாதிகள் உருவாவதற்கான காரணம் நியாயமானதாக இருந்தாலும் நியாயம் இல்லாமல் இருந்தாலும் பயங்கரவாதிகளை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். அதேபோல ஆசிரியர்களின் பிரச்சினை நியாயமானதாக இருந்தாலும் நியாயம் இல்லாமல் இருந்தாலும் ஆசிரியர்களின் போராட்டத்தை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் இதனால் பாதிக்கப்படுவது எமது அப்பாவி பிள்ளைகள்.
12-10-2021 அன்று பிரதமருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையில் நடந்த விடயங்களை முழுமையாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்க.
பிரதமருடனான சந்திப்பின் பின்னர் தொழிற்சங்கங்கள் அறிவித்த உத்தியோகபூர்வ முடிவை பார்வையிட இங்கே கிளிக் செய்க.
தயவுசெய்து 21 ஆம் திகதி நீங்கள் சென்று பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குங்கள். என்னிடம் பெரும்பாலான ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள்... சேர் நாங்கள் விருப்பத்துடன்
இதைச் செய்யவில்லை. பலவந்தம் காரணமாகவே தொழிற்சங்க நடவடிக்கைகளை செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சேவைக்கு வரும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் அவர்களுக்கு எதிராக நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வார்த்தைகளால் சரி அச்சுறுத்தல் விடுத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அந்த பொறுப்பை நான் எடுத்து சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நான் கூறிக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
ஆசிரியர்களையும் பயங்கரவாதிகளையும் ஒப்பிட்டு விளக்கிய சரத் வீரசேகர! கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை!
Reviewed by Irumbu Thirai News
on
October 14, 2021
Rating:
No comments: