தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்த பச்சைக்கொடி காட்டினாரா ஜோசப் ஸ்டாலின்?

 

இன்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம். 
 
இலங்கையில் உள்ள பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு 30 பில்லியன் ரூபாய் மேலதிகமாக கொடுக்க வேண்டியுள்ளதாகவே அடிக்கடி தெரிவிக்கப்படுகிறது. 
 
அரசாங்கத்திற்கு செய்ய முடியுமான ஒன்று இது. அது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஏனென்றால் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் மற்றும் உப தலைவர்களுக்கு 1200 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை கருத்தில் கொண்டே இவ்வாறு ஒதுக்கிடப்படுவதாக எமக்கு விளங்குகிறது. 
 
எனவே இது போன்ற விடயங்களுக்கு செலவழிக்க அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது. ஆனால் அதிபர் ஆசிரியர் பிரச்சினையை தீர்க்கத்தான் பணம் இல்லை. 
 
நாங்கள் இந்த விடயத்தில் ஒரு படி கீழே இறங்கி உள்ளோம். நாம் கோரியிருந்தது சுபோதினி அறிக்கையை தான். அதற்கு 71 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. நாங்கள் 30 பில்லியன் தேவைப்படும் அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டோம். அதுவும் சுபோதினி அறிக்கையின் ஒரு பகுதியாக இதை தரும்படி சொல்லியிருந்தோம். 
 
தெளிவாகவே எமது தொழிற்சங்க நடவடிக்கையை முழுமையாக அவ்வாறே முன்னோக்கிக் கொண்டு செல்கிறோம். எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் எமக்கு சரியான தீர்வை தராவிட்டால் 21ம் திகதி பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக வேறு ஒரு தீர்மானத்தை அறிவிக்க வேண்டி ஏற்படும் என தெரிவித்தார். 
 
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், உங்களுக்கு 2022ல் 2/3 பங்கு அதிகரிப்பும் 2023 இல் 1/3 பங்கு அதிகரிப்பும் தரப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என கேட்டதற்கு, 
00000
அப்படி ஒரு யோசனையை முன்வைக்கப்பட்டால் ஏனைய தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி அது தொடர்பில் தீர்மானத்தை எடுக்க முடியும். (இந்த கருத்துக்கே தனியார் தொலைக்காட்சி ஒன்று ஜோசப் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியதாக செய்தி வெளியிட்டது) 
 
மூன்றில் ஒரு பகுதி தருவதாகச் சொல்லும் பொழுது ஆசிரியர் சேவை 3 - 11 இல் இருக்கும் ஆசிரியர் ஒருவருக்கு இதில் முழுமையாகக் கிடைப்பது 1,250 ரூபாய் ஆகும். அதற்காகவா இவ்வளவு போராட்டம் நடத்தப்பட்டது? என்ற ஒரு விடயமும் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் நாம் கூறுகிறோம் 21ம் திகதிக்கு முன் எமக்கு தீர்வைத் தராவிட்டால் எமது வேறு தீர்மானத்தை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார். 
 
இதேவேளை அரசாங்க தரப்பைச் சேர்ந்தவர்களின் கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், போலீசாரை நிறுத்தினால் எமக்கு என்ன? எதுவும் நடக்காது. போவதா இல்லையா என ஆசிரியர்கள் தான் தீர்மானிப்பார்கள். இது பலவந்தப்படுத்தி செய்யும் வேலை அல்ல. அதனால் இந்த அமைச்சர்களுக்கு நாம் சொல்கிறோம் இதுபோன்ற கருத்துக்களை கூறி இருக்கும் வாக்குகளையும் இழக்க வேண்டாம் என்று. 
 
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் S.B. திஸாநாயக்க, அமைச்சர் S.M. சந்திரசேன உட்பட பௌத்த தேரர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.
 
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவின் கருத்துக்கு பதிலளித்த ஜோசப் ஸ்டாலின், எஸ்.பி. திஸாநாயக்கவின் இயலாமையின் காரணமாகவே அவருக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி கூட வழங்கப்படவில்லை.  எமக்கு தெரியும் இதுபோன்ற அவரது வெறும் வெட்டிப்பேச்சு காரணமாகவே சிறைக்கும் சென்றார். இதுபோன்ற வெட்டிப்பேச்சு பேசுபவர்கள், பதவி இல்லாதவர்கள் தமக்கு மீண்டும் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காகவே இதுபோன்ற சோரம் போகும் கருத்துக்களை சொல்கிறார்கள் என்று தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்த பச்சைக்கொடி காட்டினாரா ஜோசப் ஸ்டாலின்? தொழிற்சங்க நடவடிக்கைகளை நிறுத்த பச்சைக்கொடி காட்டினாரா ஜோசப் ஸ்டாலின்? Reviewed by Irumbu Thirai News on October 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.