நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம் இன்றாகும். அவர் மறைந்தாலும் இந்திய சினிமா வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஆகும்.
அவர் தொடர்பான சில முக்கிய குறிப்புகளை கீழே தருகிறோம்.
அவர் முதன் முதலில் நடித்த மேடை நாடகம் ராமாயணம். அதில் சீதையாக நடித்தார்.
அவரது முதல் திரைப்படம் பராசக்தி. 1952இல் வெளிவந்தது.
சிவாஜி மற்றும் எம்ஜிஆர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் கூண்டுக்கிளி.
1962 இல் அமெரிக்காவுக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது நயாகரா மாநகரத்தின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது அவரை வரவேற்று உபசரிக்க இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் சிவாஜி.
தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை சிவாஜி ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் வெற்றி கண்ட இவருக்கு அரசியலில் வெற்றி காண முடியவில்லை.
கலைமாமணி விருது, பத்ம பூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, தாதா சாஹிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் சிவாஜி கணேசன்.
சிவாஜி நடிக்க விரும்பிய கதாப்பாத்திரம் எது தெரியுமா? இவருக்கு 'சிவாஜி' என்ற பெயர் கொடுத்த தந்தை பெரியாருடைய வேடம்தான் அது. ஆனால், இறுதிவரை அது நடக்கவில்லை.
சென்னையில் இவரது பெயரில் சாலை, அவருக்கு மணிமண்டபம், சிலை ஆகியவை உண்டு.
இந்த நிலையில் இவரது 93வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் முகமாக Google நிறுவனம் டூடுல் (Doodle) வெளியிட்டுள்ளது. இதனை வரைந்தவர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி என்பவர்.
சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்!
Reviewed by Irumbu Thirai News
on
October 01, 2021
Rating:
No comments: