அடுத்த வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகள் 08 மாதங்கள் மட்டுமே! NIE முன்வைத்த பரிந்துரைகள் (முழு விபரம் இணைப்பு)


கொரோனா காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பாடசாலைகள் மூடப்பட்டு இடைக்கிடையே திறக்கப்பட்டாலும் அவை சரியாக வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா 3வது அலைக்குப் பின்னர் பாடசாலைகள் 04 கட்டங்களாக திறக்க சுகாதார அமைச்சு பரிந்துரை செய்த நிலையில் அதன் முதற்கட்டம் கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பமானது. 
 
இந்நிலையில் பாடசாலைகள் மீண்டும் கட்டங்கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில் மாணவர்கள் இழந்த கல்வியை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை கல்வி அமைச்சுக்கு தேசிய கல்வி நிறுவகம் முன்வைத்துள்ளது. 
 
தவறவிடப்பட்ட பாடவிதானம் தொடர்பான ஆய்வு தேசிய கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு: 

2020 இல் தவறவிடப்பட்ட பாடவிதானம் :

2021 இல் தவறவிடப்பட்ட பாடவிதானம் (2021.08.31 வரை):


 
எனவே மாணவர்கள் அடுத்த தரத்திற்கு செல்வதற்கு முன்னர் தவறவிடப்பட்ட பாட அலகுகளை பூர்த்தி செய்வதற்காக 20 வாரங்கள் கொண்ட செயல் திட்டம் தேசிய கல்வி நிறுவகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மூன்றாம் தவணையானது 20 வாரங்களை கொண்டதாக அமையும். 
 
தேசிய கல்வி நிறுவகத்தால் ஆரம்பப் பிரிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 20 வாரங்கள் கொண்ட பாடவிதானத்தை முழுமையாகப் பார்வையிட இங்கே கிளிக் செய்க.

 
அந்தவகையில் அடுத்த வருடம் ஏப்ரல் விடுமுறைக்குப் பின்னர் மே மாதமளவில் முதலாம் தவணை ஆரம்பமாகும். எனவே மே முதல் டிசம்பர் வரை 8 மாதங்களைக் கொண்டதாக அடுத்த வருடத்தின் கல்வியாண்டு அமையும். 
 
நிறைவு செய்யப்படாத பாட விதானங்களை நிறைவு செய்வதற்காக மார்ச் 31 வரை ஒவ்வொரு தரத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டிய பாடவேளைகள் தொடர்பான விபரங்களைக் கீழே காணலாம்.

 
குறிப்பு: 20 வாரங்கள் கொண்ட வேலைத்திட்டம் உயர் தரத்திற்கு பொருந்தாது.
அடுத்த வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகள் 08 மாதங்கள் மட்டுமே! NIE முன்வைத்த பரிந்துரைகள் (முழு விபரம் இணைப்பு) அடுத்த வருடத்திற்கான கல்வி நடவடிக்கைகள் 08 மாதங்கள் மட்டுமே! NIE முன்வைத்த பரிந்துரைகள் (முழு விபரம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on November 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.