மறு அறிவித்தல் வரை ஓய்வூதியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி திட்டம் ரத்து! வெளியானது சுற்றறிக்கை! ((புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு))
மறு அறிவித்தல் வரை ஓய்வூதியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அக்ரஹாரா காப்புறுதி நலன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசசேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் 09-11-2021 திகதியிடப்பட்ட 12/2005(1X) இலக்கம் கொண்ட சுற்றறிக்கை குறித்த அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுவதாவது,
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் உள்ள நலன்களை தொடர்ந்தும் விரிவுபடுத்தல் தொடர்பாக 2021-10-29 திகதியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை 12/2005(VIII) மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
01-01-2016 ற்கு முன்னர் ஓய்வு பெற்ற அதேபோன்று 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு விசேட சலுகை வழங்கும் நோக்கிலேயே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது இது தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு எதிர்ப்புகளை கவனத்திற்கொண்டு உரிய சகல தரப்பினருடனும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் வரை சுற்றறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை செயல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது என புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-10-29 திகதியிடப்பட்ட 12/2005(VIII) இலக்கம் கொண்ட அரச நிர்வாக சுற்றறிக்கையைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
குறித்த சுற்றறிக்கையின் படி 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதாந்தம் 600 ரூபாவும் 70 வயதுக்கு கீழ்ப்பட்ட ஓய்வூதியதாரர்களிடமிருந்து மாதாந்தம் 400 ரூபாவும் அறவிட தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதுதொடர்பான 09-11-2021 திகதியிடப்பட்ட 12/2005(1X) இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை கீழே காணலாம்.
மறு அறிவித்தல் வரை ஓய்வூதியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி திட்டம் ரத்து! வெளியானது சுற்றறிக்கை! ((புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு))
Reviewed by Irumbu Thirai News
on
November 09, 2021
Rating:
No comments: