சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்!


சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மக்டலேனா ஆண்டா்சன் என்பவர் தான் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 
நடந்தது என்ன? 

அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமராக இருந்த ஸ்டெஃபான் லோஃப்வென் என்பவர் தோல்வி அடைந்தார். 
 
அதனைத் தொடர்ந்து ஆளும் சமூக கட்சித் தலைவராக ஆண்டர்சன் தெரிவுசெய்யப்பட்டார். இதனை அடுத்து அவரை பிரதமராக நியமிப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. 
 
இவருக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிராக 174 வாக்குகளும் கிடைத்ததுடன் 57 பேர் வாக்களிப்பை புறக்கணித்ததுடன் ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவும் இல்லை. 
 
சுவீடனின் அரசியலமைப்பு விதிகளின்படி ஒருவர் பிரதமராகுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க தேவையில்லை. ஆனால் எதிராக 175 வாக்குகள் கிடைக்காமல் இருந்தால் அவர் பிரதமராகலாம். ஆண்டர்சனுக்கு எதிராக 174 வாக்குகளே கிடைத்ததால் அவர் பிரதமரானார். 

இதன் பின்னர் சிறிய கட்சியான கிரீன் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். ஆனால் இவர் சமர்ப்பித்த வரவுசெலவுத்திட்டம் தோல்வியடைந்ததால் கிரீன் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியது. 
 
பின்னர் ஆண்டர்சனும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். 
 
அந்தவகையில் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்று சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை மக்டலேனா ஆண்டா்ச ஏற்பட்டுள்ளது.
சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்! சுவிடன்: பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ராஜினாமா செய்த முதல் பெண் பிரதமர்! Reviewed by Irumbu Thirai News on November 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.