நாளைய "தேசிய எதிர்ப்பு தினம்" தொடர்பில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அறிவிப்பு!


நாளை(9) இடம்பெறும் தேசிய எதிர்ப்பு தினம் தொடர்பிலான தகவல்களை அதிபர் ஆசிரியர் சங்கங்களின் முன்னணி தெரிவித்துள்ளது. 
 
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில், 
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் முன்னணி மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளைய தினத்தை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்த தீர்மானித்துள்ளோம். 
 
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதோடு ஏனைய துறைகளில் காணப்படும் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்று கோரியே இவ்வாறு இந்த தினத்தை பிரகடனப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். 
 
நாளை நாட்டிலுள்ள சகல வலயக்கல்வி காரியங்களுக்கு முன்னாலும் இந்த 
 
ஆர்ப்பாட்டம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். கொழும்பிலும் லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பிற்பகல் 02 மணிக்கு ஆரம்பமாகும். கொழும்பில் உள்ள சகல அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை அந்த இடத்திற்கு வருமாறு அழைக்கின்றோம். 
 
கடந்த 25ஆம் திகதி முதல் கற்பித்துக் கொண்டு சட்டப்படி வேலையில் (Work to Rule) ஈடுபட்டு எமது போராட்டத்தை தொடரவே நாம் தீர்மானித்தோம். அதன் அடிப்படையிலேயே இந்த போராட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளோம். 
 
எதிர்வரும் வரவுசெலவுத் திட்டம் வாசிக்கும் தினத்தன்றும் பாரிய ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். எனவே நாம் அரசாங்கத்திற்கு சொல்கிறோம் அவசரமாக எமது பிரச்சினைகளை தீர்த்து தரும்படி... ஏனைய தொழிற்சங்கங்களும் எமது சம்பள போராட்டத்திற்கான ஆதரவைத் தெரிவிப்பதோடு அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் படியும் நாளைய தினம் போராட்டத்தில் இறங்குவார்கள் என்று தெரிவித்தார்.
நாளைய "தேசிய எதிர்ப்பு தினம்" தொடர்பில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அறிவிப்பு! நாளைய "தேசிய எதிர்ப்பு தினம்" தொடர்பில் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on November 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.