இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பான் வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சும் ஜப்பானின் சர்வதேச உறவுகளுக்கான நிறுவனமும் (International relations organization - IRO) ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆண்கள் மாத்திரமே இதற்காக விண்ணப்பிக்கலாம்.
தேவையான தகைமைகள்:
- வயது: 19 - 28.
- ஜப்பான் மொழித் தேர்ச்சி: JLPT, NAT N5 மட்டம் அல்லது அதைவிட அதிக சித்தி பெற்றிருப்பதோடு ஜப்பான் மொழியை பேசுதல் மற்றும் அதை புரிந்து கொள்ளும் இயலுமை இருத்தல்.
- க.பொ.த. (உ/த) ற்கு தோற்றியிருத்தல் வேண்டும்.
- உயரம்: குறைந்தது 150 CM.
- நிறை: குறைந்தது 45 KG.
- விண்ணப்பதாரி சிறந்த உடல் மற்றும் உள நலம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
- பச்சை (Tatoo) குத்தி இருக்கக் கூடாது.
மேற்சொன்ன தகைமையுடையவர்கள் 22-11-2021 மு.ப. 10:00 மணிக்கு முன்னர் விண்ணப்பத்தை E-Mail இல் அனுப்ப வேண்டும்.
இ-மெயில் முகவரி:
off3_sswrp@slbfe.Ik
மேலதிக விபரங்களுக்கு: 011-2076446.
ஜப்பானில் வேலைவாய்ப்பு: விண்ணப்பங்களை கோரியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு!
Reviewed by Irumbu Thirai News
on
November 21, 2021
Rating:
No comments: