ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடுவது தொடர்பான கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேற்படி நாடுகளுக்கு தொழில் வாய்ப்பிற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்புக்கு அமைவாக தொழில்களை
பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா தொழில் வாய்ப்பானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கான தொழில் வாய்ப்புகள் அந்த நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைவாக அனுமதி வழங்கப்பட்ட தொழில் முகவர் நிறுவனங்கள் ஊடாக மாத்திரமே ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. எனவே இந்த விடயங்களை கருத்திற்கொண்டு மோசடிகளுக்கு ஏமாற வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பான் தென்கொரியா மற்றும் இஸ்ரேலில் வேலைவாய்ப்பு: மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Reviewed by Irumbu Thirai News
on
November 08, 2021
Rating:
No comments: