இந்த வருடத்திற்குரிய (2021) சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களம் கோரியுள்ளது.
- இம்முறை பரீட்சைக்காக சகல விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை (Online) முறைமையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
- 2021-12-20 (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
- நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி அதன் PDF கோவையை அச்சுப் பிரதி எடுத்து தேவையேற்படின் அதனை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். அச்சுப்பிரதி திணைக்களத்திற்கு அனுப்ப தேவையில்லை.
- பாடசாலையிலிருந்து விலகி இடுகை பத்திரத்தை பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே இப்பரீட்சைக்கு தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பாடசாலையில் கற்றுக்கொண்டே தனிப்பட்ட பரீட்சார்த்தியாக விண்ணப்பிப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தோற்றுவது கண்டறியப்படின் பரீட்சை பெறுபேறு ரத்து செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் பரீட்சைக்கு தோற்றுவதும் தடை செய்யப்படும்.
- விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலமோ அல்லது Exams SRI LANKA என்ற App மூலமோ சமர்ப்பிக்கலாம்.
- தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள முடியும்.
- பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த பின்னர் எக்காரணத்திற்காகவேனும் விண்ணப்பித்த பரீட்சை நிலையமோ ஊடக மொழியோ அல்லது பாடங்களோ பின்னர் மாற்றம் செய்யப்படமாட்டாது. எனவே தங்களின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- கட்டணங்களை தபால் நிலையத்திலோ அல்லது Credit/ Debit அட்டைகள் மூலமோ செலுத்தலாம்.
- கட்டண விபரம்:
01 பாடம் - ரூபா: 100.00
02 பாடங்கள் - ரூபா: 150.00
03 பாடங்கள் - ரூபா: 200.00
04 பாடங்கள் - ரூபா: 250.00
05 பாடங்கள் - ரூபா: 300.00
06 - 09 பாடங்கள் - ரூபா: 350.00
- 2022-01-20 ம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது.
பரீட்சைக்கு விண்ணப்பித்தல் தொடர்பான பத்திரிகை அறிவித்தலை கீழே காணலாம்.
க.பொ.த. (சா.தர) விண்ணப்பம் - 2021 (Online விண்ணப்பம் மற்றும் முழு விபரம் இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
December 19, 2021
Rating:
No comments: