பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான தீர்மானத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
அதாவது தற்போதைய புதிய கொரோனா வைரஸ் பிறழ்வினால் (ஓமிக்ரோன்)
பாதிப்பு ஏற்படாவிட்டால் சகல பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சில பல்கலைக்கழகங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருக்கிறார்கள். எனவே அவர்கள் எல்லோரையும் அழைக்கும் பட்சத்தில் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இடையே கொரோனா பரவும் அச்சம் நிலவுகிறது. எனவே தற்போதைய வைரஸ் திரிபு பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால் எதிர்வரும் ஜனவரியில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும். எவ்வாறாயினும் தற்போதைய நிலையில் 25 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
Reviewed by Irumbu Thirai News
on
December 12, 2021
Rating:
No comments: