ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பாக 2021-8-30 மற்றும் 2022-1-3 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டங்களின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் பிரகாரம் இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைக்கான புதிய சம்பள அளவு திட்டங்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
03/2016(1V) என்ற இலக்கம் கொண்ட இந்த அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்றைய தினம் (5) வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் 2022-1-1 ஆம் திகதி முதல் அமல்படுத்தப்படும்.
தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.
அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் புதிய சம்பள விபரம் (சுற்றறிக்கை இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
January 05, 2022
Rating:
No comments: