அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கல்வி அமைச்சு! சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை என அறிவிப்பு! (அறிவித்தல் இணைப்பு)
உயர்தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஆரம்பப்பிரிவு தவிர்ந்த ஏனைய தரங்களுக்கு விடுமுறை வழங்க அரசு ஏற்கனவே தீர்மானித்தது.
ஆனால் ஆரம்பப்பிரிவை மாத்திரம் நடத்துவது பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டி அதிபர் ஆசிரியர் சங்கங்கள் கல்வி அமைச்சரிடமும் கல்வி அமைச்சின் செயலாளரிடமும் இதுதொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்ப பிரிவுக்கும் விடுமுறை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தன.
இந்நிலையில் கல்வி அமைச்சின் ஊடக செயலாளரின் கையொப்பத்துடன் இன்று வெளியான விசேட அறிவித்தலின் படி உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷேட அறிவித்தலின் படி, உயர்தரப் பரீட்சை நடைபெறுவதை முன்னிட்டு அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சகல தரங்களுக்கும் பெப்ரவரி மாதம் 7ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் மார்ச் மாதம் 7ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் கண்டியில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கண்டி மாவட்டத்திற்கான வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
ஆரம்ப பிரிவை மாத்திரம் நடத்துவது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் ஆரம்ப பிரிவுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சரிடமும் கல்வி அமைச்சின் செயலாளரிடமும் தமது சங்கம் கோரிக்கைகளை முன் வைத்ததாக அவர் தெரிவித்தார்.
விடுமுறை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தலை கீழே காணலாம்.
அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கல்வி அமைச்சு! சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை என அறிவிப்பு! (அறிவித்தல் இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
February 02, 2022
Rating:
No comments: