2020 இல் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி சித்தியடையாத மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நடைமுறையை அரசாங்கம் ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
2020 இல் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி 98000 மாணவர்கள் சித்தியடையாமல் இருக்கின்றனர். இவர்களுள் கணித பாட பெறுபேற்றை மீண்டும் எடுத்து தருவதாக கூறி உயர்தரத்தில் கற்போரைத் தவிர ஏனைய அனைவரும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவர்.
இவர்களின் திறன் மற்றும் ஆர்வத்துக்கேற்ப அவரவர் துறைகளுக்கு உரிய தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர் உரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருக்கும் இத்திட்டத்திற்கு பிரதேச செயலக மட்டத்தில் மாணவர்கள் இனங்காணப்பட்டு இணைத்துக் கொள்ளப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா. தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு! அரசாங்கம் நடவடிக்கை!
Reviewed by Irumbu Thirai News
on
February 14, 2022
Rating:
No comments: